Thursday, 19 May 2016

"ஸ்பைருலினா' மாத்திரைகள்



கிராமத்தில் தயாராகும் உணவுக்கு ஈடான "ஸ்பைருலினா' மாத்திரைகள்

விருதுநகர்:

விருதுநகர்  அருகே தாதம்பட்டி கிராமத்தை சேர்ந்த சிவக்குமார், விண்வெளிக்கு செல்வோர், சாப்பாட்டிற்கு பதிலாக பயன்படுத்தும் "ஸ்பைருலினா' மாத்திரைகளை தயாரித்து வருகிறார்.தாதம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் எஸ்.சிவகுமார். டிப்ளமோ எல்க்ட்ரானிக்ஸ் படித்த இவர், இயற்கை விஞ்ஞானியாக மாறி வருகிறார். அறிவியல் தொழில் நுட்ப முறையில், நுண்ணுயிர் உரங்களை தயாரித்து வருகிறார்.

 அசோஸ்பைரில்லம், ரைசோபியம், அசட்டோ பேக்டர், நீலப்பச்சைப்பாசி, அசோலா போன்ற இயற்கை உரங்கள் தயாரித்து வருகிறார்.இதில் கிருமி நீக்கம் செய்ய, "ஏர் பிளோ சேம்பர், பெர்மண்டார் ஆட்டோ டைமர்' இணைப்புடன், ஆட்டோகிளேவ் இயந்திரங்களை நிறுவி இருக்கிறார். இதில் விவசாய பல்கலைகளிடமிருந்து பெற்றுள்ள, நுண்ணுயிர்களை ஊடகக்கரைசலை பயன்படுத்தி, நொதிக்க வைத்து இயற்கை உரம் தயாரிக்கிறார்.

 ரசாயன கலப்பு உரங்கள் பயன்படுத்தாமல், இயற்கை விவசாய முறையால் உணவு பொருள்களை உற்பத்தி செய்து வருகிறார்.

ஸ்பைருலினா கேப்சூல்:
    விண்வெளிக்கு செல்லும் விஞ்ஞானிகள், பல நாட்கள் அங்கு தங்கி ஆய்வு பணியில் ஈடுபடும் போது, சாப்பாட்டிற்கு பதிலாக,
"ஸ்பைருலினா கேப்சூல்'கள் தான் உட்கொள்கின்றனர். இந்த "ஸ்பைருலினா' கண்டுபிடிக்கப்பட்டதற்கான காரணம், தென் ஆப்ரிக்காவில் கடும் பஞ்சம் ஏற்பட்ட போது, மடகாஸ்கர் பகுதியில் உள்ளவர்கள், தண்ணீரை மட்டும் குடித்து உயிர் வாழ்ந்தனர். இதை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், தண்ணீரில், ஸ்பைருலினா என்ற பச்சைய பொருள் இருப்பதை கண்டனர்.
     இதில் தாது உப்பு, வைட்டமின், உணவு, புரதம், மருந்து ஆகிய சத்துக்கள் உள்ளன என கண்டறியப்பட்டது. இதில் புற்று நோய், பார்வைக்கோளாறு, ரத்தக்கொதிப்பு, உடல் பருமன், தோல் நோய்கள், எலும்புருக்கி, நீரிழிவு, ரத்தசோகை, ரணம் ஆகிய அனைத்துக்கும் மருந்தாக பயன்படுகிறது.
சிவகுமார் கூறியதாவது:
 நான் படித்ததற்கும், தேர்வு செய்துள்ள துறைக்கும் சம்பந்தமே இல்லை. இயற்கை விவசாயத்தில் ஈடுபாடு கொண்டு விவசாய பல்கலை வழங்கும் அனைத்து பயிற்சிகளிலும் பங்கேற்பேன். அதை செயல்படுத்தும் விதமாக, நுண்ணுயிர் உரம் தயாரிப்பு ஆய்வகத்தை உருவாக்கியுள்ளேன். அனைத்து சத்துக்களும் நிறைந்த, "ஸ்பைருலினா' கேப்சூல் விலை 3 ரூபாய் தான், என்றார். இவரை தொடர்பு கொள்ள 95850 89677ல் ஹலோ சொல்லலாம்.
     சுருள்பாசி எனப்படும் ஸ்பைருலினா உடலுக்கு தேவையான அனத்து
சத்துக்கள் நிறைந்தது இது இரத்த அழுத்த்ம்,சர்க்கரைஅல்சர்,
கேன்சர்,எய்ட்ஸ்,உடல் பருமன்,கொழுப்பு கரைத்து மேலும் பல
நோய்களை குணமாக்குகிறது மேலும் விண்வெளி ஆராய்ச்சி மேற்
கொள்பவர்கள் உணவு உட்கொள்ள இயலாது எனவே இதை கேப்சூலாக எடுத்துக் கொள்வார்கள் 1கிலோ காய்கறி பழங்களில் உள்ள சத்துக்கள் 1கிராம் ஸ்பைருலினாவில் உள்ளது
சுருள் பாசி(Spirulina) வளர்ப்பு, விற்பனை பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழ் உள்ள முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்

Address  
5/25 61st street,sidco nagar,villivakkam, Chennai, India 600049
Phone : 9444622837, 9176484161, 917648418
1

No comments:

Post a Comment