Thursday, 19 May 2016

ஆரோக்கியமாக 100 ஆண்டு வாழ: ஸ்பைருலினா



                       ஆரோக்கியமாக 100 ஆண்டு வாழ: ஸ்பைருலினா
ஸ்பைருலினா இது ஒரு சைவ மூலப்பொருள்:
      ஒருகிலோ ஸ்பைருலினாவில் அடங்கியுள்ள சத்துப்பொருட்களின் அடிப்படையில் 1000 கிலோ காய்கறிகளுக்குச் சமம்.
    SPIRULINA (ஸ்பிருலீனா) எனப்படும் சுருள் பாசி உலகத்திலேயே அதிப் பழமையானது. சயனோபாக்டீ்ரியா குடும்பத்தைச் சேர்ந்தது. இது ஒரு நன்னீரில் வளரும் நுண்பாசி இனத்தைச் சேர்ந்தது. கடல் பாசி அல்ல.
ஸ்பைருலினாவில் இருக்கும் சத்துக்கள் :
  புரதம்: வேறெந்த உணவுப் பொருளையும்விட 60 முதல் 70 சதவீதம் புரதம் ஸ்பைருலினாவில்இருக்கிறது. இந்த புரதம் 90 சதவீதம் ஜீரணத் திறன் கூடியது.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் நோய்களிலிருந்து மனித உடலைபாதுகாக்கிறது. ஸ்பைருலினா இளமைத் தோற்றத்தைக் தக்க வைக்கிறது ஆரோக்கியமான உடலாக மாற்றுவதற்கு உதவுகிறது.

    
ஸ்பைருலினா கர்ப்பிணிப் பெண்கள் அவசியம் சாப்பிட வேண்டிய ஊட்டச் சத்து உணவு. ஸ்பைருலினாவில் இரும்பு, துத்த நாகம், கால்சியம், மக்னீசியம், செலினியம் உட்பட அனைத்து தாதுச்சத்துக்களையும் கொண்டது. ஸ்பைருலினாவில் இரும்புச்சத்து எளிதில் ஜீரணிக்கப்படுகிறது.
ஸ்பைருலினாவில் இரத்த சோகையை அடியோடு நீக்கும்.
வைட்டமின்கள்
    வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் பி12 உள்ளிட்ட அனைத்து வைட்டமின்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
நமது உடலுக்கு அதிக சக்தியளிப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகளுக்கு உகந்தது
பாலிசாக்ரைடுகள் :
சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது
உடலை தூய்மைப்படுத்தி, விஷத் தன்மையிலிருந்து பாதுகாக்கிறது.
பீட்டா கரோட்டின்:
                கண் பார்வை  கூர்மையை அதிகரிக்கிறது.
உடல் சருமத்தை பாதுகாக்க உதவுகிறது.
காமாலினோலெனிக் அமிலம்:
                தாய்ப்பால் தவிர ஸ்பைருலினாவில் இந்த அமிலம் இருக்கிறது.
கொழுப்புத்தேக்கம், உடல் பருமன், மூட்டுவலி போன்ற நோய்களிலிருந்து பாதுகாப் பளிக்கிறது.
மாதவிடாய்க்கு முன் தோன்றும் பிரச்னை கடுமையைக் குறைக்க உதவுகிறது.
புற்று நோய், பார்வைக்கோளாறு, ரத்தக்கொதிப்பு, உடல் பருமன், தோல் நோய்கள், எலும்புருக்கி, நீரிழிவு, ரத்தசோகை, ரணம் ஆகிய அனைத்துக்கும் மருந்தாக பயன்படுகிறது.
ஸ்பைருலினா கேப்சூல்:
விண்வெளிக்கு செல்லும் விஞ்ஞானிகள், பல நாட்கள் அங்கு தங்கி ஆய்வு பணியில் ஈடுபடும் போது, சாப்பாட்டிற்கு பதிலாக, "ஸ்பைருலினா கேப்சூல்'கள் தான் உட்கொள்கின்றனர்.
"ஸ்பைருலினா' வில் இவ்வளவு சத்துக்கள் இருப்பதை எப்படி கண்டுபிடித்தனர் :
தென் ஆப்ரிக்காவில் கடும் பஞ்சம் ஏற்பட்ட போது, மடகாஸ்கர் பகுதியில் உள்ளவர்கள், தண்ணீரை மட்டும் குடித்து உயிர் வாழ்ந்தனர். இதை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், தண்ணீரில், ஸ்பைருலினா என்ற பச்சைய பொருள் இருப்பதை கண்டனர்.
இதில் தாது உப்பு, வைட்டமின், உணவு, புரதம், மருந்து ஆகிய சத்துக்கள் உள்ளன என கண்டறியப்பட்டது.

No comments:

Post a Comment